நீலகிரி மாவட்ட உதகை 34 வது வார்டு எச் எம் டி தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் ஆயிரத்துக்கும் மேலான குடும்பங்கள் வசிக்கின்றனர், அன்றாட வீட்டு உபயோக குப்பைகளை தினந்தோறும் சாலை ஓரத்தில் கொட்டுவதால் குப்பைகள் சிதறி கிடப்பதோடு ஈக்கள் கொசுக்கள் அதிகமாகின்றன இந்த இடம் மக்கள் அதிகமாக நடக்கக்கூடிய சாலை என்பதையும் உணராமல் குப்பைகளை அப்படியே வீசி செல்வதால் இப்பகுதி சுகாதார சீர்கேடு மற்றும் வனவிலங்குகள் தெரு நாய்கள் நடமாட்டம் அதிகரித்து வருகின்றன, பல வருடங்களாக எச் எம் டி தொழிற்சாலை மூடப்பட்ட நிலையில் உள்ளதால் இங்கு தெரு நாய்கள் அதிகமாக பெருகி உள்ளன, மற்றும் காட்டெருமைகள் காற்றுப்பண்டிகள் போன்ற வனவிலங்குகள் அதிகரிக்கின்றன என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றன, இந்த சூழ்நிலையில் குப்பைகளை வெளியே கூட்டுவதால் வன விலங்குகளும் அதனை சாப்பிடுவதால் வனவிலங்குகள் பலவிதமான நோய்களுக்கு பாதிப்புகள் ஆகிறது என்று வனவிலங்கு சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை? இது போன்ற வீட்டு உபயோக குப்பைகளை அப்பகுதியில் வாழும் மக்கள் உதகை நகராட்சி துறையோடு ஒத்துழைத்தாள் நமது பகுதியும் நமது நாடும் தூய்மையாக இருக்கும் என்று அப்பகுதியில் உள்ள அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணராஜ் ராமசாமிதெரிவித்தார், இந்தப் பகுதி முக்கிய ஆலயங்களுக்கு செல்லக்கூடிய வழியாகும் இங்கு தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான தங்கும் விடுதி, எலிக்கள் கோவில் செல்லும் முக்கிய சாலை, ரோஜா பூங்கா மற்றும் கல்லூரிகள் பல முக்கிய இடமாக இருந்தும் சாலையிலே குப்பைகளை கொட்டுவதை நிறுத்த முடியாமல் பல வருடங்களா சரியான தீர்வு காணாமல் இருந்ததை அறிந்து கிராமத்தில் சுகாதாரம் காத்தல் ஐயலக அணி தோப்பியா மற்றும் மதர் செல்வி வாய்ஸ் அறக்கட்டளை சார்பில் உதகை நகராட்சியுடன் இணைந்து N R T I A இன் திமுக எத்தியோப்பியா பிரிவின் தலைவர் எத்தியோப்பியா முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணராஜ் ராமசாமி தலைமையில், இப்பகுதியில் உள்ள அனைத்து குப்பைகளையும் அகற்ற வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு முதல் கட்டமாக பகுதி மக்களிடம் ஆலோசனைகள் அறிவுரைகள் வழங்கி மக்களுடைய ஒத்துழைப்பு முழுமையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டன, அதனைத் தொடர்ந்து 34 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் ரகுபதி, உதகை நகராட்சி தலைவர் வாணிஸ்வரி ஆகியோர் முன்னிலையில் குப்பைகளை முற்றிலும் அகற்றும் பணி உதகை நகராட்சி உதவியுடன் சேரும் சகதிமாக காணப்பட்ட இடத்தை முற்றிலும் தூய்மை செய்தனர், இவர்களோடு ஜே எஸ் எஸ் கல்லூரியின்
டைப் பேக் ஒருங்கிணைப்பாளர் ஆர் சண்முகம் தலைமையில் ஜே எஸ் எஸ்
கல்லூரி மாணவ மாணவிகள் தூய்மையாக்கும் பணியில் உதவியாக இருந்தனர், தற்போது இந்த பகுதி முற்றிலும் சி சி டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்ட இடங்களில் குப்பைகளை வீசுபவர்களை கண்காணிக்கப்பட்டு வருகிறது, இதனால் அப்பகுதி மக்கள் முழுமையாக கிராமத்தில் சுகாதாரம் காத்தல் ஜெயலக அணி இத்தொப்பியா மற்றும் மதர் செல்வி வாய்ஸ் அறக்கட்டளை, NRTIA இன் திமுக எத்தோப்பியா பிரிவின் தலைவர் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணராஜ் ராமசாமி அவர்களின் ஆலோசனைக்கிணங்க அப்பகுதி முழுதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது, அதனை மீறி அதே இடத்தில் குப்பைகளை கொட்டுபவர்களை கண்காணித்து அதற்குரிய பணிகளை அவர்களிடமே ஒப்படைக்கப்படுகின்றன, இந்த பகுதியை முற்றிலும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டNRTIA திமுக எத்தோப்பியா, மதர் செல்வி வாய்ஸ் அறக்கட்டளை, உதகை நகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள், உதகை நகராட்சி தலைவர் வாணிஸ்வரி, 34 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் ரகுபதி, மற்றும் ஜே எஸ் எஸ் கல்லூரி டை ஃபேக் ஒருங்கிணைப்பாளர் ஆர் சண்முகம் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஆகியோர்களுக்கு அப்பகுதி மக்களும் மிகுந்த நன்றியை தெரிவித்து அறிவுரைகளை ஏற்றுக் கொண்டு நீலகிரி மாவட்டம் முழுவதற்கும் ஒரு எடுத்துக்காட்டான இடமாக இருக்க ஒத்துழைப்போம் என்று உறுதி அளித்துள்ளனர்,.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0