கோவை ரயிலில் கஞ்சா கடத்தல் – கேரள வாலிபர் கைது..!

கோவை ரயில்வே போலீசார் மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர் . அப்போது கேரளாவில் இருந்து கோவை வந்த ரயிலில் வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக அமர்ந்து இருந்தார். உடனே போலீசார் அவரிடம் இருந்த பையை வாங்கி சோதனை செய்தனர். அதில் 1 கிலோ 500 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரைகாவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மலப்புரத்தை சேர்ந்த அபுதாகீர் (வயது27) என்பது தெரிந்தது. இதை தொடர்ந்து மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார்வழக்கு பதிவு செய்து அபுதாகீரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.