கோவையில் கஞ்சா கும்பல் கைது.

கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேற்று சிங்காநல்லூர் ஜி.வி. ரெசிடென்சி பகுதியில்ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு கும்பலை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதையடுத்து 5 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், முத்துகிருஷ்ணாபுரம் சேர்ந்தராஜ்குமார் ( வயது 21 )தென்காசி மாவட்டம் செங் கோட்டை அச்சன்புதூரைச் சேர்ந்த முகம்மது யாசின் ( வயது 23) கேரள மாநிலம் மணப்புரம், அஸ்பின் ( வயது 22) கோழிக்கோடு மாவட்டம் அனக் கிருஷ்ணா (வயது 23) முகமது (வயது 22) என்பது தெரியவந்தது.இவர்களிடமிருந்து 410 கிராம் கஞ்சா,பணம் ரூ. 2500, இரண்டுஇரு சக்கர வாகனங்கள், 5 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.