அடி – தடி வழக்கில் கைதான குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலைய பகுதியில் வசிப்பவர் சங்கர். இவரது மகன் சத்தியநாராயணன் (37) இவரை அடித்து காயப்படுத்திய குற்றத்திற்காக குளத்துப்பாளையம் சந்தைப்பேட்டை வீதியைச் சேர்ந்த கார்த்திகேயன்என்ற மொட்டை கார்த்தி (வயது 39) என்பவரை தொண்டாமுத்தூர்போலீசார் கைது செய்தனர். இவர் மீது அடி -தடி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான மேற்படி நபர், தொடர்ந்து பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்கிற்கும் பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக கார்த்தி கேயன் என்ற மொட்டை கார்த்தி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர்கிராந்தி குமார் பாடி, மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின் அடிப்படையில் அடிதடி வழக்கு குற்றவாளியான கார்த்திகேயன் என்ற மொட்டை கார்த்தியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.