மாணவர்களுக்குவாட்ஸ் அப் மூலம் கஞ்சா – போதை மாத்திரை விற்பனைசெய்யும் கும்பல் கைது.

கோவையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனையை தடுக்க போலீசார் தொடர்ந்து தீவீரகண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் நேற்று பீளமேடு புராணி காலனி, பைரவர் நகர் ரயில்வே தண்டவாளம் அருகேதிடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பதுங்கி இருந்த ஒரு கும்பலை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1350 கிராம்கஞ்சா 327போதை மாத்திரைகள், 4 செல்போன், 3 இருசக்கர வாகனங்கள், 25 கவர், ரூ 2 ஆயிரம் பணம்பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் அவர்கள் பாப்பநாயக்கன்பாளையம் பழையூர் மாத்யூ (வயது 21) புலியகுளம் பிரசாந்த் ( வயது 23) ஒண்டிப்புதூர் வசந்த் ( வயது 20 )கபில் ( வயது 24)என்பது தெரியவந்தது.இவர்கள் கல்லூரி அருகே உள்ளஓட்டல் மற்றும் பேக்கரிகளில் நின்று கொண்டுவாட்ஸ் அப் மூலம் தகவல் கொடுத்து மாணவர்களை வரவழைத்து போதை மாத்திரைகள் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.