கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா -போதை மாத்திரை விற்பனை செய்த கும்பல் கைது

கோவை மதுவிலக்கு அமுல்பிரிவு போலீசார் நேற்று உக்கடம் -சுங்கம் பைபாஸ் ரோட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்தப் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர் களுக்கு கஞ்சா போதை மாத்திரைகள் விற்பனை செய்வதற்கு கொண்டு சென்ற ஒரு கும்பலை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் 1200 கிராம் கஞ்சா, 320 போதை மாத்திரைகள்,போதை மாத்திரை விற்ற பணம் ரூ 90 ஆயிரம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தொண்டாமுத்தூர் தேவராயபுரத்தைச் சேர்ந்த நியூட்டன் ( வயது 27)பேரூர் செட்டிபாளையம் ரமேஷ் (வயது 25) சவுந்தர்ராஜ் (வயது 26 )ராகுல் (வயது 24) உக்கடம் |வின்சென்ட் ரோடு முகமத் அனஸ் ( வயது 30) சொக்கம்புதூர் கோவிந்தசாமி லேஅவுட்டை சேர்ந்த ராம் பிரசாத் ( வயது 36) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பேரூர் செட்டிபாளையம் சக்திவேல், தேவராயபுரம் ஷெல்டன், மன்னார் காடு சுதர்சன், மும்பை மருந்து கடை அதிபர் நிகில் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்..இவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.