பொழுதுபோக்கு கிளப்பில் பணம் வைத்து சூதாட்டம். 14 பேர் கைது.

கோவை தொண்டாமுத்தூர்பக்கம் உள்ள குபேரபுரி “கோவை திருபுவன் கிளப்பில் ” பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக தொண்டாமுத்தூர் போலீசுக்கு ரகசியதகவல் வந்தது .போலீசார் நேற்று மாலை அங்கு திடீர்சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள ஒரு அறையில் பணம் வைத்து சீட்டு விளையாடியதுகண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக கல்வீரம்பாளையம் சண்முகம் ( 52 ) ரத்தினபுரி இயேசு பாலன் (58) முதலிபாளையம் கதிர்வேல் ( 59 ) செல்வபுரம் ரங்கராஜன் (48) ஈச்சனாரி சுரேஷ் (44) சூலூர் பாலசுப்பிரமணியன் ( 56 ) கவுண்டம்பாளையம் ராஜ்குமார் ( 49 ) தொண்டாமுத்தூர் திவாகர் ( 35 ) இடையர்பாளையம் முருகன் (38 )சிறு பூலுவப்பட்டி அண்ணாமலை (34) வடவள்ளி நாகராஜ் (50) கதிர்வேல் (54 ) கோவில் மேடு சீனிவாசன் (50) ஆகியோர் கைது செய்யப் பட்டனர். சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட ரூ 59 ஆயிரத்து 990 பறிமுதல் செய்யப்பட்டது.அந்த கிளப்புக்கு சீல் வைக்கப்பட்டது.