வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் – 14 பேர் கைது..!

கோவை அருகே உள்ள நீலாம்பூர், அண்ணா நகரில் ஒரு வீட்டில் பணம் வைத்து சீட்டாட்டம் நடப்பதாக சூலூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் மாதையன், சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பணம் வைத்து சீட்டடியதாக வெள்ளானைப்பட்டி பொன் விஜயன் நீலம்பூர் ரமேஷ் குமார், மணிகண்டன், குரும்பபாளையம் அன்புராஜ், கிட்டம்பாளையம் அன்பரசன் ,நாகராஜ் , அரசூர் பெரியசாமி, நீலாம்பூர் சின்னச்சாமி, சூலூர் கணேச மூர்த்தி, முதலிபாளையம் ராஜகோபால், குரும்பபாளையம் முருகன், கார்த்திகேயன், மகேந்திரன் ,ராசிபாளையம் சிவசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து சீட்டாட பயன்படுத்தப்பட்ட ஒரு 51,460 பறிமுதல் செய்யப்பட்டது.