திருச்சியில் கடந்த 21 ஆம் தேதி தமிழர்களின் பாரம்பரிய மல்லர் கம்பம் விளையாட்டுப் போட்டிகள் அண்ணா விளையாட்டு மைதான உள் விளையாட்டு அரங்கில் தொடங்கியது. அந்த போட்டியில் மல்லர் கம்பம் போட்டியில் தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, உத்திரபிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 16 மாநிலங்களிலிருந்து ஒரு மாநிலத்திற்கு 6 ஆண்கள், 6 பெண்கள் வீதமும், பீகார், அஸ்ஸாம், கேரளா, ஒடிசா உள்ளிட்ட 11 மாநிலங்களிலிருந்து மாநிலத்திற்கு 2 ஆண்கள், 2 பெண்கள் வீதமும் வீரர்கள் கலந்து கொண்டனர். மல்லர் கம்பம் விளையாட்டில் நிலைநிறுத்தப்பட்ட மல்லர் கம்பம், தொங்கவிடப்பட்ட மல்லர் கம்பம், கயிறு மல்லர் கம்பம் ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. மேலும் கடந்த 21 ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற்ற போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் தனி தனி போட்டி, ஆண்களுக்கான போட்டி, மகளிருக்கான போட்டி, ஆண், பெண் கலப்பு போட்டி என நடத்தப்பட்டது. மேலும், அனைத்து போட்டிகளிலும் ஒட்டுமொத்தமாக மகாராஷ்டிரா அணி 209.25 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்தது. 207.35 மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும், 205.30 மதிப்பெண்கள் பெற்று மத்திய பிரதேசம் மூன்றாவது இடத்தையும் பிடித்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது அதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முதல் இடங்களை பிடித்தவர்களுக்கு தங்கப்பதக்கமும், இரண்டாம் இடங்களை பிடித்தவர்களுக்கு வெள்ளி பதக்கமும், மூன்றாம் இடங்களில் பிடித்தவர்களுக்கு வெண்கல பதக்கங்களையும் வழங்கினர். தொடர்ந்து மல்லர் கம்பம் விளையாட்டு நிறைவு விழாவையொட்டி 500 பேர் கலந்து கொண்ட சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 500 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிலம்பம் சுற்றினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோரும் சிலம்பம் சுற்றினர். விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் இளைஞர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0