இனி வாரம் ஒரு முறை காவல் அதிகாரிகள் மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும் – தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் வாரத்தில் ஒருநாள் பொதுமக்களை கண்டிப்பாக சந்திக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; கமிஷ்னர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் வாரத்தில் ஒருநாள் பொதுமக்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும். பொதுமக்கள் காவல் உயர் அதிகாரிகளை எளிதில் அணுகும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, காவல் ஆணையகரம் மற்றும் எஸ்.பி. அலுவலகங்களில் புதன்கிழமையன்று பொதுமக்களை சந்திக்க உத்தரவிட்டுள்ளது அரசு.