இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச சிறப்பு முகாம் அமிர்த வித்யாலயா மருத்துவர்கள் திருச்சி பிரஸ் கிளப்பில் பேட்டி. இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச சிறப்பு முகாம் அமிர்தம் வித்யாலயா சார்பில் பிப்ரவரி நான்காம் தேதி நடைபெற உள்ளது இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு திருச்சி பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. அமிர்தம் வித்யாலயா மருத்துவமனை மருத்துவர்கள், பாலாஜி, சித்தாநந்தாமிர்த சைதன்யா கூறுகையில் 100 -ல் 1 குழந்தைக்கு இதய நோய் பாதிப்பு இருக்கிறது. 10 சதவீத குழந்தைகளுக்கு பிறந்து 1 மாதத்தில் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் உயிரிழப்பு ஏற்படும். 40 சதவீத குழந்தைகளுக்கு 1 வருடத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும். இதய நோய் என்பது பரவலாக காணப்படுகிறது. அமிர்தம் வித்யாலயா மருத்துவமனை சார்பில் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாம் பிப்ரவரி 4ம் தேதி நடைபெறுகிறது. காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாமில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கலந்துகொண்டு பயன் பெறலாம். சிறப்பு முகாமில் விரிவான மதிப்பீடு, எக்கோ கார்டியோகிராம்கள், பரிசோதனை நடைபெறுகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான குழந்தைகளுக்கு கொச்சியில் உள்ள அமிர்தம் மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சை அல்லது மருத்துவ ஆலோசனை நடைமுறைகள் வழங்கப்படும். இந்த முகாம் திருச்சி மல்லியம்பத் போஸ்ட், வயலூர் பிரதான சாலை, இரட்டை வாய்க்கால், அமிர்தம் வித்யாலயாவில் நடைபெறுகிறது. இதற்காக திருச்சி ரயில் நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து இலவச பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என கூறினார். இந்த இருதய இலவச மருத்துவ முகாமை திருச்சி மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0