கோவை ஆர் .எஸ் . புரம் கிழக்கு சம்பந்தம் ரோட்டை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 66 )இவருக்கு ஆர். எஸ் .புரம். பால் கம்பெனி அருகே சொந்தமான கட்டிடம் உள்ளது. இங்கு ஆர். எஸ். அலைய்டு என்ற பெயரில்கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்திற்கு ஜெயராம் என்பவரை முதல்வராக நியமித்திருந்தார். இவர் மூலமாக சொக்கலிங்கம் பிள்ளை ( வயது 73 ) என்பவர் ராஜேஸ்வரிக்கு அறிமுகமானார்.சொக்கலிங்கம் பிள்ளை ராஜேஸ்வரியிடம் இந்த கல்வி நிறுவனம் பற்றி பொது மக்களுக்கு விளம்பரப்படுத்துவதாகவும்,மேலும் இங்கு படிக்கும் மாணவர்களுக்கு அப்துல் கலாம் கல்வி உதவித்தொகை வாங்கித் தருவதாகவும் கூறினாராம் இதை நம்பிய ராஜேஸ்வரி 18 .10, 20 23 அன்று சொக்கலிங்கம் பிள்ளையிடம் ரு20 லட்சம் கொடுத்தார். மொத்தம் 300 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வாங்கித் தருவதாக கூறிமேலும் ரூ 70 லட்சம்வாங்கினார். மொத்தம் ரூ 90 லட்சம் சொக்கலிங்கம் பிள்ளையிடம் ராஜேஸ்வரி கொடுத்தார். கல்வி உதவித்தொகை எதுவும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜேஸ்வரி ஆர் .எஸ் . புரம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவு பேரில் உதவி கமிஷனர் ரவிக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்கு பதிவு செய்து . டி.வி.எஸ் நகர், ராஜலட்சுமி காலனியைச் சேர்ந்த சொக்கலிங்கம் பிள்ளையை கைது செய்தார். இவர் தற்போது சோமையனூர், திருவள்ளுவர் நகரில் வசித்து வந்தார் இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0