அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஆசிரியையிடம் ரூ.8 லட்சம் மோசடி.

கோவை அருகே உள்ள இருகூர் ,மகாகவி நகரை சேர்ந்தவர் ராம் பிரகாஷ். இவரது மனைவி சரண்யா ( வயது 36) கோவையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் “கிராப்ட் “ஆசிரியை யாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு துடியலூர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள முத்து நகரை சேர்ந்த ராஜேஷ் பிரிதிவி என்பவர் அறிமுகமானார். அவர் தனக்கு அரசியல் வட்டாரத்தில் முக்கிய பிரமுகர்களை தெரியும் அவர்கள் மூலமாக அரசு ஆசிரியை பணி வாங்கி தருவதாக கூறினார். இதை நம்பிய சரண்யா அவரிடம்கடந்த ஆண்டு ரூ 8 லட்சம் கொடுத்தார். அவர் கூறியபடி வேலை எதுவும் எடுத்துக் கொடுக்கவில்லை. பணத்தை திருப்பி கேட்ட போது தர மறுத்து விட்டார். இந்த நிலையில் சரண்யா துடியலூர் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் லதா விசாரணை நடத்தி ராஜேஷ் பிரிதிவி மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.