ஏ.டி.எம்.மையத்தில் பணம் எடுக்க உதவுவது போல நடித்து முதியவரிடம் ரூ35 ஆயிரம் மோசடி.

கோவை கே.சி. தோட்டம் சாமி ஐயர் புது வீதியை சேர்ந்தவர்முருகேசன் ( வயது 62 )இவர் நேற்று ஒப்பணக்கார வயதில் உள்ள கனரா வங்கி ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் அவரிடம் பணம் எடுத்து தருவதற்கு உதவிசெய்வதாக கூறினார். அதை நம்பி கார்டை அவரிடம் கொடுத்தார்.அவர் பணம் எடுப்பது போல் நடித்து இந்தமிஷின் பழுதடைந்துள்ளது. மற்றொரு ஏடிஎம் மையத்தில் எடுத்து தருகிறேன் என்று கூறினாராம். அதற்குள் அவர் வைத்திருந்த கார்டை மாற்றி முருகேசனிடம்மற்றொரு கார்டை கொடுத்து விட்டு மாயமாகிவிட்டார். பின்னர் சிறிது நேரத்தில் முருகேசன் கணக்கிலிருந்து ரூ. 35 ஆயிரம் எடுக்கப்பட்டதாக தகவல் வந்தது இது குறித்து முருகேசன் வெரைட்டி ஹல் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.