நகைகளை அடகு வைத்து ரூ22 லட்சம் மோசடி .

கோவையை சேர்ந்தவர்கள் குமரேசன் ( வயது 34) அவரது மனைவி நாக தர்ஷினி (வயது 30) மற்றும் சரவணன் இவர்கள் 3 பேரும் சேர்ந்த கடந்த ஆண்டு 505 கிராம் தங்க நகைகளை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடமான வைத்து ரூ 21 லட்சத்து 90 ஆயிரம் கடனாக பெற்றனர். அந்த நிறுவனத்தில் தணிக்கை செய்த போது 505 கிராம் தங்க நகைகளில் 205 கிராம் போலி நகை என்பது தெரியவந்தது. இது குறித்து தனியார் நிதி நிறுவன மண்டல மேலாளர் ஜெபசீலன் சாம்ராஜ் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குமரேசன் அவரது மனைவி நாக தர்ஷினி ஆகியோரை நேற்று கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.