கோவை; தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 31) இவர் தேனியில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் இவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட நபர் கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். பின்னர் தங்கள் நிறுவனத்தின் மூலம் இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களில்அதிக சம்பளத்துடன் வேலைவாங்கி தருவதாக தெரிவித்துள்ளார். வேலை பெற்று தர ரூ 8லட்சம் செலவாகும் என கூறினார். இதை நம்பி பார்த்திபன் முதல் தவணையாக ரூ.2.5 லட்சம் அனுப்பி வைத்தார் .இதன் பின்னர் ஒரு மாதமாக வேலை பற்றி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து பார்த்திபன் கேட்டபோது பல்வேறு காரணங்களை கூறிவந்துள்ளனர். இந்த நிலையில் காந்திபுரம், 100 ரோட்டில் உள்ள நிறுவனத்திற்கு பார்த்திபன் நேரில் வந்து பார்த்தார். அப்போது அப்படி ஒரு நிறுவனம் இல்லை என்பது தெரிய வந்தது. அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் கேட்ட போது. ஏராளமானவர்கள் இங்கு வந்து செல்கிறார்கள். வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் ரூ 25 லட்சம் வரை மோசடி செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். ஏமாற்றப் பட்டதை உணர்ந்த பார்த்திபன் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0