மகளிர் சுய உதவி குழுவினற்கு வட்டி இல்லா கடன் வாங்கி தருவதாக காகித நோட்டுகள் கொடுத்து ரூ 10 லட்சம் மோசடி. பலே கில்லாடி கைது.

கோவை அருகே உள்ள சின்னியம்பாளையத்தில் மகளிர் சுய உதவி குழுவுள்ளது. இதில் 28 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களுக்கு சூலூர் அருகே உள்ள செலக்கரிச் சலை சேர்ந்த விஜயா ( வயது45) என்ற பெண் அறிமுகமானார். அவர் அன்பழகன் ( வயது 50) என்பவரைஅவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அன்பழகன் தான் அறக்கட்டளை நடத்தி வருவதாகவும், நீங்கள் ஊனமுற்றோர் பெயரில் அறக்கட்டளை தொடங்கினால் வெளிநாட்டில் இருந்து வட்டி இல்லாமல் கடன் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதை யடுத்து ,விஜயா அன்பழகன் ஆகியோர் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த 28 பெண்களை சந்தித்து உங்களுக்கு வட்டி இல்லாமல் ரு6 கோடி 75 லட்சம் கிடைத்துள்ளது. அந்த பணத் தை வங்கியில் இருந்து எடுக்க சில விதிமுறைகள் உள்ளன .எனவே நீங்கள் 28 பேரும் தலா ரூ. 5 லட்சம் கொடுத்தால் ரூ. 6 கோடியே 25 லட்சத்தில் பங்கு பெற்றுக் கொள்ளலாம்என்று கூறியுள்ளனர் அதை நம்பிய 28 பேரும் தலா ரூ.5 லட்சம் கொடுக்க முடிவு செய்தனர். இதில் 2 பெண்கள் தலா ரூ.5 லட்சத்தை தயார் செய்து விட்டு அன்பழகன், விஜயா ஆகியோரிடம் கடந்த வாரம் கொடுத்தனர். இந்த நிலையில் நேற்று அந்த 2 பேரும் கோவை பட்டணத்தைச் சேர்ந்த அந்த குழுவில் உள்ள ஒரு பெண் வீட்டுக்கு சென்றனர். அவர்கள் அந்த பெண்ணிடம் தங்களி ம் உள்ள பெரிய காகிதப் பெட்டியில் உங்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ 6 கோடி 75 லட்சம் உள்ளது. அந்த பணத்தை உங்கள் வீட்டில் வைத்துக்கொண்டு மற்ற 26 பேருக்கும் தலா ரூ. 5 லட்சம்பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். இதை யடுத்து அவர்கள் பணம் இருப்பதாக கூறிய காகிதப் பெட்டியை அந்த பெண்ணின் வீட்டில் வைத்து ஒரு அறையில் வைத்து கதவை பூட்டி சாவி எடுத்துச் சென்றனர். அவர்கள் 2 பேரும் சென்ற பிறகு அந்தப் பெண் தனது குழுவில் உள்ள மற்ற பெண்களை தனது வீட்டுக்கு வரவழைத் தார். பின்னர் அந்த பெண் நமது குழுவுக்கு ரூ 6 கோடியே 75 லட்சம் வட்டி இல்லாத கடன் கிடைத்துள்ளது. குழுவில் ஒவ்வொருவருக்கும் தலா 24 லட்சம் கிடைக்கும் அதை வைத்து என்ன செய்யலாம்? என்று ஆலோசனை செய்தனர் .அப்போது சில பெண்கள் காகித பெட்டியில் இருக்கும் பணத்தைமுதலில் சரி பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் பணம் வைக்கப்பட்ட அறையை விஜயா, அன்பழகன் ஆகியோ பூட்டி விட்டு சென்றதாக அந்த பெண் கூறினார்.. இதையடுத்து மற்றொரு சாவி மூலம் அந்த அறையை திறந்து பணம் இருப்பதாககூறிய அந்த பெட்டியை திறந்து பார்த்தனர். அப்போது அவர்களு க்கு அதிர்ச்சி காத்திருந்தது .அந்தபெட்டிக்குள் பணத்துக்கு பதிலாக கட்டுக்கட்டாக காகித நோட்டுகள் இருந்தன. அப்போதுதான் அன்பழகன் ,விஜயா ஆகியோர் தங்களை மோசடி செய்ததை மகளிர் குழுவினர் அறிந்தனர். இதனால் விஜயா அன்பழகன் ஆகியோரை பொறிவைத்து பிடிக்க பெண்கள் முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் விஜயா, அன்பழகன் செல்போனுக்கு தொடர்பு கொண்டு நாங்கள் 26 பேரும் பணத்தை தயார் செய்து விட்டோம். வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினர். அப்போது அன்பழகன் மட்டும் அங்கு வந்தார்.அப்போது அங்கு மறைந்திருந்த சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை மற்றும் போலீசார் அவரை சுற்றிவளைத்து பிடித்தனர் .அந்த வீட்டில் கட்டு கட்டாக இருந்த காகித நோட்டுகளை பறிமுதல் செய்தனர் ..இதை தொடர்ந்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுவிசாரணை நடத்தி அன்பழகனை கைது செய்தனர். இந்த வழக்கில் தலை மறைவான விஜயாவை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த இருவரும் இதே போல் வேறு யாரிடமாவதுமோசடி செய்து உள்ளார்களா ?என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.