பென்ஷன் வாங்கி தருவதாக முதியவரிடம் தங்க மோதிரம் மோசடி

கோவை குனியமுத்தூர் பாலக்காடு ரோட்டில் உள்ளமுத்துசாமி வீதியை சேர்ந்தவர்பூபதி     ( வயது71) காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.. இவர் உக்கடம் லாரி பேட்டை அருகே பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அவரை டிராப் செய்வதாக கூறினார். இதை நம்பி பூபதி அவரது இருசக்கர வாகனத்தில் ஏறினார். பின்னர் அவர் அந்த ஆசாமி முதியவரிடம் மத்திய அரசு வழங்கி வரும் முதியோர் ஓய்வூதியம் ரூ4000 வாங்கித் தருகிறேன். என்று கூறினார். பிறகு அங்குள்ள ஒரு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார். கையில் மோதிரம் அணிந்து இருந்தால் பென்சன தர மாட்டார்கள். அதை கழட்டி தாருங்கள் என் இருசக்கர வாரத்தில் வைத்துக் கொள்கிறேன். போய்விட்டு வந்ததும் தருகிறேன் என்று கூறினார். இதை நம்பிய முதியவர் மோதிரத்தை கழட்டி கொடுத்தார். சிறிது நேரத்தில் அந்த ஆசாமி மாயமாக மறைந்து விட்டார். இது குறித்து கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது போலீசார் வழக்கு பதிவு செய்து அமானுல்லா என்ற ஆசாமியை தேடி வருகிறார்கள். மேலும் விசாரணை நடந்து வருகிறது.