தென்காசி மாவட்டத்தில் நசுக்கப்படும் நான்காம் தூண்கள் :-பாரப்பட்சத்தால் பரிதவிக்கும் பத்திரிகை யாளர்கள்;-!!

தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் உதவி அலுவலரின்
சாதி வெறியின் உச்சத்தால் பத்திரிகையாளரி டையே சாதிய பாகுபாடு ஏற்றத்தாழ்வு
பார்த்து சாதிகளாக தரம் பிரித்து ஆதிக்க மனப்பான்மை எண்ணம் கொண்ட சாதி பத்திரிகை யாளர்கள் குழுவை ஏற்படுத்தும் செயல் தாழ்த்தப்பட்ட பட்டியல் சமூகத்தை சேர்ந்த பத்திரிகை யாளர்கள் மனவேதனையில் குமுறல்..!! தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பத்திரிகைத்துறைக்காக அரசால் செயல்படுத்தப்படும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராகவும் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு உதவி அலுவலராகவும் PRO ,APRO ஆகிய இருவரும் சுமார் மூன்று வருட காலமாக தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையில் இருவரும் பணி செய்து வருகின்றனர். தென்காசி செய்தி தொடர்பு அலுவலருமான திருமதி இளவரசி என்பவர் தனது சொந்த மாவட்டமான தென்காசி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை செய்து அரசுப்பணியை தவறாக பயன்படுத்தி
தென்காசி மக்களவைத் தொகுதியில் பத்திரிக்கைத் துறையில் அல்லாத PRO மற்றும் APRO ஆகியோர் இருவரும் அவர்களுக்கு வேண்டியபட்ட ஒரு சில குறிப்பிட்ட நபர்களுக்கு நிருபர்கள் என்ற பெயரில் போலியான பத்திரிகையாளர்களுக்கு தேர்தல் அட்டை வழங்கியும் உண்மையான பாத்திரிக்கை யாளர்களை சின்ன பத்திரிக்கை பெரிய பத்திரிக்கை என இனம் , பிரித்து
தமிழக அரசால் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகள் இலவச பேருந்து பயண அட்டை மற்றும் இருசக்கர நான்கு சக்கர வாகனத்தில் ஒட்டப்படும் பிரஸ் ஸ்டிக்கர் அரசு அங்கீகார அடையாள அட்டை இலவச வீட்டுமனை போன்ற பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு சலுகைகளை சில போலியான பண வசூல் வேட்டைக்கு பத்திரிகைத் துறையை தவறாக முறைகேடாக பயன்படுத்தும் பத்திரிகையாளர் என்ற போர்வையில் பத்திரிக்கையாளர் என்ற பெயரை தவறாக பயண்படுத்தியும் தனியார் கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள்
மற்றும் அரசு பணியாளர்களை செய்தி வெளியிடு வோம் என்ற புதுவகையான மிரட்டல் பெயரில் அதை கேடயமாக வைத்து பண பேர வசூலில் ஈடுபடும் பல கில்லாடிகளை கையில் வைத்துக் கொண்டு தென்காசி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர். உதவி அலுவலர் ஆகியோர் குறிப்பிட்ட தங்கள் சொல்லுக்கு கீழ்படிந்து தங்கள் ஆட்டி வைக்கும் ஆட்டத்திற்கு ஏற்றார் போல் ஆடும் கைப்பாவையாக உள்ள ஜால்ரா கோஷ்டிகளை பயன்படுத்தி தமிழக அரசு பத்திரிகையாளர்களுக்கு வழங்கும் நலதிட்ட உதவிகளை ஊழல் முறைகேடு மோசடிகள் செய்து தனக்கென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனி ராஜாங்கம் நடத்தி வரும் பிஆர்ஓ ஏபிஆர்ஓ இருவரும் அரசு செய்தித்தாள் களில் வழங்கும் அரசு விளம்பரங்களை குறைந்த விலையில் சில பத்திரிகையாளர் கைக்கூலிகள் மூலம் விளம்பரங்கள் செய்து அதிக தொகைக்கு விளம்பரங்களை கணக்கு காட்டி அரசுக்கு போலியான அறிக்கை அளித்து அரசு பணத்தை கொள்ளையடித்து வரும் துறை அலுவலர்கள் சமீபத்தில் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் . பத்திரிகை துறையில் இதுவரை எந்த செய்தி மக்கள் தொடர்பு அலுவலரும் செய்யாத செயல் பத்திரிகையாளரை சாதிரீதியாக ஏற்றத்தாழ்வு சாதிய பாகுபாடு பார்க்கும் செயலை பி.ஆர்.ஓ தென்காசி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆதிக்க மனப்பான்மை எண்ணம் கொண்ட சாதி வெறி பிடித்த சில பத்திரிகை செய்தியாளர்கள் என்ற குறிப்பிட்ட உயர்சாதி எனக்கூறி கொள்ளும் நபர்களை கையில் எடுத்து இவர்கள் தான் உண்மையான தென்காசி மாவட்ட பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் சாதிய அடிப்படையில் செயல்படும் ஒரு பத்திரிகையாளர்கள் சங்க குழுவை பிஆர்ஓ ஏற்படுத்தி அதன் மூலம் தென்காசி மாவட்டத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட பட்டியல் சமூகத்தை சேர்ந்த குறிப்பிட்ட சில பத்திரிகை யாளர்களை தரம் பிரித்து சாதிய காழ்ப்புணர்ச்சியில் அவர்களை நசுக்க ஓடுக்க அரசு நலத்திட்ட உதவிகளில் அவர்களை புறந்தள்ள வேண்டும் என்ற தீய சாதி வெறியில் செயல்பட்டு வரும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திருமதி.இளவரசி மற்றும் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு. இராமசுப்பிரமணியன் ஆகியோர் தொடர்ந்து சாதிய ஏற்றத்தாழ்வு சாதிய பாகுபாடு பார்க்கும் சாதிய தீண்டாமை வன்கொடுமை செயலை அரங்கேறி வருகிறார் இது ஜனநாயகத்திற்கும் பத்திரிகை தர்மத்திற்கும் எதிரான செயலாகும் இது போன்ற செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலத்தில் பத்திரிகையாளர்களுக்கு அரசு சலுகை வழங்குவதில் பாரபட்சம் காட்டாமல் இதனை உடனடியாகக் தடுத்து பத்திரிக்கைத் துறையை அழிக்க நினைக்கும் செயலை தடுக்க தேவையான கடும் நடவடிக்கையினை எடுத்து தமிழக அரசும் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனரும் தென்காசி மாவட்ட ஆட்சியரும் விரைந்து எடுத்திட வேண்டும் என்பது தென்காசி மாவட்டத்தில் உள்ள பாதிக்கப்படும் பத்திரிகையாளர் களின் மன வேதனையான கண்ணீர் கோரிக்கையாகவே உள்ளது அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமா? சம்பந்தப்பட்ட துறைச் சார்ந்த புகாருக்குரிய அலுவலர்கள் மீது நடவடிக்கை பாயுமா? என்பது பரவலாக பத்திரிகையாளர்கள் மத்தியில் மனகுமுறலில் எழும் கேள்வியாக உள்ளது…