கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதால் அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன .இந்த திருப்பணிகளை விரைவாக செய்யும் பொருட்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் ஏப்ரல் மாதம் 6 -ம் தேதி வரை மலைப்பாதையில் 4 சக்கர வாகனங்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக கோவில் மினி பஸ்களில் சென்று சாமி தரிசனம் செய்யலாம். இது குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் வருகிற ஏப்ரல் 4-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை விரைவாக முடிக்க வேண்டிய காரணத்தினால் இன்று (வியாழக் கிழமை) முதல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி வரை மலைக் கோவிலுக்கு 4 சக்கர வாகனங்களில் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. மேலும் வருகிற ஏப்ரல் 6-ம் தேதி வரை உள்ள அரசு விடுமுறை மற்றும் செவ்வாய்க்கிழமை ஞாயிற்று கிழமை கிருத்திகை நாட்களில் இருசக்கர வாகனங்களில் செல்வதற்கும் அனுமதி இல்லை. எனவே பக்தர்கள் மலைபடிகள் வழியாகவும், கோவில் பஸ் களிலும் சென்று சாமி தரிசனம் செய்யலாம்..இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0