காவிரி பிரச்சனை சுமூகமான முடிவு எட்டப்படும் முன்னாள் பிரதமர் தேவகவுடா.

திருச்சிக்கு வருகை மதசார்ப்பற்ற தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா நேற்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது காவிரி பிரச்னை குறித்து தமிழ்நாட்டில் உள்ள. ஆட்சியாளர்களுக்கு முழுமையான விவரங்கள் தெரியும். பெங்க ளூருவில் மட்டும் 1.40 கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் அனைவரும் சீரான குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இதில் ஒளிவுமறைவு இல்லை. தமிழ்நாட்டில் ஆளும் கட்சிகளுக்கும் இது தெரியும். கர்நாடகாவில் உள்ள பெங்களூரு உள்ளிட்ட 9 மாவட்ட மக்கள் குடிநீருக்காக கஷ்டப்பட்டு வருகின்றனர். காவிரி நடுவர் குழுவினர்கள் காவிரி பிரச்னை குறித்து 2 மாநிலங்களுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படுத்த முயற்சி மேற் கொண்டு இருக்கிறார்கள். அந்த நாள் விரைவில் வரும். அன்று இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். இதற்கு மேல் நான் கருத்து கூற விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் பிரதமர் தேவகவுடா திருச்சி வருகை ஒட்டி ஏராளமான போலீசார்கள் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.