கோவை, 1804ல் ஆங்கிலேயரை எதிர்த்து அன்றைய கொங்கு மண்டல மக்களை திரட்டி கோவையில் இருந்து சேலம் வரை ஆயுத போராட்டம் நடத்திய புரட்சிப்படை தலைவர் தளபதி என போற்றப்படும், இராமசாமி பண்ணாடியாரின் 220 வது நினைவு தினம், வீரவணக்க கூட்டம் கோவை வேடப்பட்டி வன்னியம்பாளையத்தில் நடைபெற்றது. இவ் விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சரும்,கட்சி தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு சிறப்பித்தார். அங்கு கூடியிருந்த மக்கள், விழா குழுவினர் வரவேற்றனர், தொடர்ந்து இராமசாமி பண்ணாடியாரின் திரு உருவபடத் திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து வணங்கினார்,
நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
இப்பகுதியில் 50 ஆண்டுகளாக பட்டா இல்லாத மக்களுக்கு அதிமுக ஆட்சியில் பட்டா வாங்கி கொடுத்து உரிமையுடன் வாழ வழி செய்து தந்தோம், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து இரத்தம் சிந்தி போராட்டம் நடத்தி பெற்று தந்த சுதந்திரம் . அந்த போராட்டத்தின் போது முன்னின்றவர்களில் முக்கியமானவர் நம்ம மண் காத்த தளபதி இராமசாமி பண்ணாடியார்,போராட்ட காலத்தில் ஆங்கிலேயர் களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர், ஆங்கிலேயர்கள் போட்ட வரி விதிப்பை எதிர்த்து ஆயுதப்போராட்டத்தை கோவையில் தொடங்கி சேலம் வரை நடத்தினார். அன்றைய சூழலில் திப்புசுல்தான், சுப்தரலிங்கனார், மருதுசகோதரர்கள், மற்றும் தீர்ன் சின்னமலை போன்ற சுதந்திர போராட்ட வீரத்தியாகிகளுடன் இனைந்து ஒற்றுமை யாக ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டவர் ,நம் மண்ணின் தளபதி இராமசாமி பண்ணாடியாருக்கு புகழஞ்சலி செலுத்து என்பது எனக்கு பெருமையே எனறார் அவரின் நினைவு நாளை கொண்டாடுவதன் மூலம் இளைஞர்கள் நாட்டுப்பற்றுடன் இருக்க வேண்டும், தமிழக அரசு இராமசாமி பண்ணாடியாருக்கு நினைவு நாளை கொண்டாட வேண்டும் என்று கூறினார், வீரவணக்க கூட்டத்தில் அவரது புகழை போற்றி வணங்குவதாக தெரிவித்தனர்.