சொத்து குவிப்பு வழக்கில் கோவை மாநகராட்சி மாஜி அதிகாரிக்கு ஜெயில்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சங்கரநாராயணன் ( வயது 75 )இவர் அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் வந்தது. இது தொடர்பாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய தில் கடந்த 1995 – ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் 2000 -ம் ஆண்டு இறுதி வரையிலான காலகட்டத்தில் சங்கரநாராயணன் வருமானத்தை காட்டிலும் கூடுதலாக ரூ.12, லட்சத்து 53 ஆயி த்துக்கு சொத்து சேர்த்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சங்கரநாராயணன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர் .இந்த வழக்கு விசாரணை கோவை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோகன ரம்யா குற்றம் சாட்டப்பட்ட ஓய்வு பெற்ற இளநிலை பொறியாளர் சங்கரநாராயணனுக்கு 1- ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.