ஆந்திர முன்னாள் முதல்வர் காங்கிரஸ் கட்சியில் இருந்த கிரண் குமார் ரெட்டி பாஜகவில் இணைந்தார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஒன்றாக ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமாக இருந்த போது அப்போது ஆந்திர மாநில முதல்வராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிரண்குமார் ரெட்டி.
இவர் கடந்த சில வருடங்களாகவே காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒதுங்கியே இருந்தார். ராகுல்காந்தி தலைமைக்கும், காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுக்கும், கிரண் குமார் ரெட்டிக்கும் இடையே மனக்கசப்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் முகாமிட்டு இருந்த கிரண்குமார் ரெட்டி இன்று பாஜக முக்கிய தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். ஆந்திராவின் 16வது முதல்வராக இருந்த கிரண் குமார் ரெட்டி பாஜகவில் இணைந்தது ஆந்திர மாநிலத்தில் பாஜகவுக்கு கூடுதல் பலமாக இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.