முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்தநாள் விழா சூலூர் எட்டாவது வார்டு அதிமுக செயலாளர் அருண் குமார் ஏற்பாட்டில் நினைவு கல்வெட்டு அமைக்கப்பட்டு 500க்கும் மேற்பட்ட அப்பகுதி வாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது . முன்னதாக சூலூர் நகர செயலாளர் கார்த்திகை வேலன், தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பிரபுராம் கழக கொடியினை ஏற்றி வைத்தனர். அன்னதானம் நிகழ்வினை தெற்கு ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் C.A. ரமேஷ், தெற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் சிவகுமார், தெற்கு ஒன்றிய ஐடிவி தலைவர் பிரபு ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து அம்மா அவர்களின் 76 வது பிறந்தநாள் நினைவு கல்வெட்டினை சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி. பி கந்தசாமி, மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுச்சாமி அவர்கள் மாநகர எம் ஜி ஆர் மன்ற துணைச் செயலாளர் பீடம் பள்ளி ஊராட்சி மன்ற தலைவரும் சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் குமரவேல், முத்துகவுண்டன் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ,சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி .பி. கந்தவேல் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சாந்திமதி அசோகன் ,சூலூர் கந்தநாதன், பேரூராட்சி கவுன்சிலர் சுமதி கார்த்திகைவேலன், பானு ஜுவல்லரி பழனிசாமி , ஆகியோர் கல்வெட்டினை திறந்து வைத்தனர். பொள்ளாச்சி முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் கோவை தெற்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார், ஐடி விங் வினோத், உதயகுமார், ஆனந்தன், எஸ். ஏ. ஆறுமுகம், ஏ.பி. அங்கணன், சிடிசி பேச்சிமுத்து, திலகவதி, பெருமாள் சாமி, சண்முக சுந்தரம், கணேசன் மற்றும் ஒன்றிய, நகர கழக பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0