கோவில் விழாவில் பவளக்கொடி கும்மி நடனம் ஆடிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி

கோவை ,கொங்கு மண்ணின் பாரம்பரிய கிராமிய கலையான கும்மி ஆட்டத்தில் தமிழ் மண் மனம் கவர்ந்த கும்மி ஆட்டத்திற்கு பல விருதுகளை பெற்ற பவளக்கொடி கும்மியாட்ட அறக்கட்டளை குழுவினரின் மூன்று விதமான பிரம்மாண்டமான அரங்கேற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு நடனக் குழுவினருடன் இணைந்து நடனமாடி துவக்கிவைத்தார். கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர், தென்னமநல்லூர் கிராமம், அருள்மிகு ஸ்ரீ கரிய காளியம்மன் திருக்கோவில் திருமண மண்டப மைதா னத்தில், தென்கயிலை ஈசன் கலை பண்பாட்டு மையம் சார்பாக, தமிழ் மண் மனம் விருது பெற்ற பவளக்கொடி கும்மியாட்ட குழுவினரின் முப்பெரும் அரங்கேற்ற விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலா ளருமான எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, நடனமாடி அரங்கேற்றத்தை துவக்கிவைத்தார். இதில் ஏராளமான பெண்களும், ஆண்களும் கலந்துகொண்டு பாரம்பரிய நடனம் ஆடியது காண்போரை வெகுவாக கவர்ந்தது. மேலும் கலைஞர்கள் அனைவரையும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெகுவாக பாராட்டி நடனம் ஆடியவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி ஊக்குவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அதிமுக கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்..