நீலகிரி உதகை ஸ்டேட் பேங்க் பேண்ட்லைன் சாலைப் பகுதியில் இரண்டு வாரங்களுக்கு மேலாக கழிவு நீர் சாலையில் ஓட்டம், சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் அவதிக்கு உள்ளனர்

நீலகிரி மாவட்ட உதகை ஸ்டேட் பாங்க் பேண்ட் லைன் செல்லும் நடைபாதை மற்றும் சாலையில் இரண்டு வாரத்திற்கு மேலாக கழிவு நீர் வெளியேறி அப்பகுதியில் தேங்கி நிற்பதாலும் சாலையில் நடை பாதையில் செல்வதால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர், உணவு விடுதி மற்றும் தேநீர் கடைகள் அதிகமாக உள்ளதால் சுகாதாரச் சீர்கேடு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து நகராட்சி மற்றும் பகுதி நகரமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா என்பது கேள்விக்குறியாகி உள்ளது, இரண்டு வாரங்களுக்கு மேலாக இந்த கழிவு நீர் சாலையில் ஓடிக்கொண்டே இருக்கின்றன, இதனை உடனடியாக சரி படுத்தாமல் அப்படியே விடுவதால் உதகை ஒரு சுற்றுலாத்தளம் என்பதை கண்டுகொள்ளாமல் இருக்கும் நகராட்சியும் மாவட்ட நிர்வாகம் தான் என்று மக்கள் எரிச்சல் அடிகின்றன, அப்பகுதியில் தேநீர் கடைகள் உணவு அருந்தும் ஹோட்டல்கள் உள்ளன, இந்தக் கழிவு நீரை மிதித்தே செல்ல வேண்டிய ஒரு அவல நிலை இரண்டு வாரங்களுக்கு மேலாக உள்ளது, தனால் சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் கழிவு நீரிலேயே நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது, இதனை உடனடியாக நகராட்சி மற்றும் நகர மன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் தன்னார்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்?