கோவையில் முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம்.

கோவை; தமிழ்நாடு முதலமைச்சர் மு .க . ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கோவை காந்திபார்க் சுக்கிரவார் பேட்டையில் உள்ள அருள்மிகு .பால தண்டாயுதபாணி கோவிலுக்கு முன்அமைக்கப்பட்ட பந்தலில் 2 ஆயிரம்பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நேற்று மதியம் அன்னதானம் வழங்கபட்டது. இதை கோவில் அறங்காவலர் குழு தலைவர் துரை. பரமசிவன்தனது சொந்த செலவில் வழங்கினார். கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் அ. ரவி,பகுதி கழக செயலாளர் கார்த்திக் செல்வராஜ், ஆகியோர்அன்னதானத்தை தொடங்கி வைத்தனர். அமைப்பு குழு தலைவர் சந்தோஷ், அறங்காவலர்கள் மகேஸ்வரன் விஜயலட்சுமி,இளைஞர் அணி அமைப்பாளர் ஹக்கீம்,பகுதி அமைப்பாளர் ஆல்வின்மற்றும் பலர் கலந்து கொண்டனர்.