கோவை அருகே உள்ள கவுண்டம்பாளையம் பி. அண்ட் . டி காலனி ஸ்ரீதேவி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 42 )இவர் கோவை டவுன்ஹாலில் பூக்கடை நடத்தி வந்தார்.இவருக்கும் ,இவரது தங்கையின் கணவர் சண்முகம் (வயது 56) என்பவருக்கும் நில பத்திரம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது -இந்த நிலையில் நேற்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சண்முகம் நேற்று சீனிவாசனை கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் ஏற்பட்டது.அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.பின்னர் சண்முகம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சீனிவாசனின் அண்ணன் அருணாச்சலம் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் ராஜேஷ், சப் இன்ஸ்பெக்டர் சந்திரமூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து மைத்துனர் சண்முகத்தை தேடி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0