ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம் ஆரம்பம் – மீன்வளத்துறை அறிவிப்பு..!

மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் என தமிழ்நாடு மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஏப்ரல் 14-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் ஜூன் மாதம் 15ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாகும்.
இந்த 61 நாட்கள் மீன்கள் இனப்பெருக்க காலம் என்பதால் விசைப்படகு மற்றும் இழுவை படகுகள் மூலம் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக் கூடாது என மீன் வளத்துறை மீனவ கிராமங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர்.வேதாரண்யம் அடுத்த ஆற்காட்டுத்துறையில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்தடை காலம் துவங்க இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் மீன்கள் அதிக அளவு கிடைக்காததால் முன் கூட்டியே விசைப்படகுகளை கரைக்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர்.
ஓய்வுக்காக வந்த படகுகளை பழுது பார்த்து வர்ணம் பூசி புதுப்பிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். மீன்கள் அதிக அளவு கிடைக்காதால் செலவுக்கு கூட கட்டுபடி ஆகாததால் விசைப்படகுகளை 2 நாட்கள் முன்கூட்டியே கரைக்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர்.