பிளாஸ்டிக் கடையில் தீ விபத்து ரூ 5. லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையத்தில் உள்ள மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் தேவராஜன் .இவரது மனைவி ஜோதிமணி ( வயது 44) இவர் பி. கே. புதூர், கண்ணப்பன் தோட்டம் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக பிளாஸ்டிக்கடை நடத்தி வருகிறார். .நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு தனது கணவருடன் வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது கடையிலிருந்து புகைவருவதாக அங்கிருந்தவர்கள் செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். வந்து பார்த்தபோது கடை முழுவதும் தீ பிடித்து எரிந்து நாசமானது . இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர் சேதம் மதிப்பு ரூ..5 லட்சம் இருக்கும் .தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து குனியமுத்தூர்போலீசில் ஜோதிமணி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.