அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நலம் மையம் சார்பில் கோவை புலியகுளம் புனித அந்தோனியார் அருள்தளம் மினி ஹாலில் நிறுவனத் தலைவர் கோவை சி.எம். ஸ்டீபன் ராஜ் தலைமையில் கிறிஸ்மஸ் குதூகல கொண்டாட்ட விழா மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. கௌரவ ஆலோசகர் பி. மில்டன் துவக்க ஜெபம் செய்து நிகழ்ச்சி யை துவக்கி வைத்தார். கோவை மாநகர் மாவட்ட மகளிர் அணி தலைவி ஜி. ஜோஸ்பின் மெர்சி அனைவரையும் வரவேற்றார். மாநில மகளிர் அணி தலைவி ஐ. கரோலின் விமலாராணி, கௌரவ தலைவர் பி. எஸ். ஸ்டீபன், கௌரவ ஆலோசகர்கள் எஸ் கணேசன், அ. லியோ பெர்னாண்டஸ், பி.சதீஷ்குமார், ஆர். புகழேந்தி, ஒய். அமுல் தாஸ், எம். முபாரக், ஜி. ராதாகிருஷ்ணன், மெர்சி மகளிர் சுய உதவி குழு தலைவி ஐ. பிரான்சினா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை புளியகுளம் ஊர் சபையின் தலைவர் பா. அறிவழகன், தமிழ் அமுதம் காளிதாஸ் அறப்பணி மையத்தின் தலைவர் தமிழ் அமுதம் அய்யாசாமி, அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவையின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் பி. புஷ்பானந்தம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் தோழர் ப. மாணிக்கம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பிரமுகர் எம். மில்லர் தாஸ், திமுக அண்ணா கலைஞர் அன்பு படிப்பகம் இரா. தேவராசு நினைவகத்தின் செயலாளர் தே. இளங்கோ, அனைத்து கிறிஸ்தவ மக்கள் மறுமலர்ச்சி இயக்கத்தின் நிறுவனத் தலைவர் கோவை ஜேசுதாஸ், மாநில அமைப்பு செயலாளர் பி. வி. சாஜி, வெற்றி பாலாஜி, கிறிஸ்தவ போராளி கிங் சாலமன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சி.எஸ்.ஐ ஆல் சோல்ஸ் ஆலயத்தின் உதவி போதகர் ஜே. ராஜேஷ் கிறிஸ்துமஸ் சிறப்பு செய்தி அளித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் களப் போராளி சுசி கலையரசன் சிறப்புரை ஆற்றினார். திரைப்பட தயாரிப்பாளர் சமூக ஆர்வலர் திரைப்பட நடிகர் பிரதீப் ஜோஸ் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் பாடல் பாடி ஏழை எளிய தாய்மார்கள் 200 பேருக்கு புடவைகள் வழங்கி வாழ்த்துரை நிகழ்த்தினார். விழாவில் திரைப்பட நடிகர் பிரதீப் ஜோஸ் நேர்முக உதவியாளர் பாலாஜி, விக்னேஷ், ராமச்சந்திரன் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். பி. மில்டனின் பரவசமூட்டும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் நல மையத்தின் செயற்குழு உறுப்பினர் எஸ் கிறிஸ்டி மோனிஷா நன்றி கூறினார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0