அனல் பறக்கும் பிரசாரம்… 39 தொகுதிகளில் வெற்றி வாகை சூடிக் கொடுத்த அண்ணாமலை.!!

ர்நாடகாவில் காங்கிரஸ் அலை வீசியபோதும், அண்ணாமலையிடம் ஒப்படைக்கப்பட்ட, 86 தொகுதிகளில் 39-ல் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது; பா.ஜ., வெற்றி பெற்ற 66 தொகுதிகளில், இரண்டு மடங்கு தொகுதிகளின் வெற்றி அண்ணாமலை பிரசாரத்தை வைத்தே கிடைத்துள்ளது.கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு, பா.ஜ., இணை பொறுப்பாளராக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.
 அவர், ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றிய, கடலோர கர்நாடகா, வட கர்நாடகா, சிக்மகளூர், பெங்களூரு, தமிழர்கள் அதிகம் வசிக்கும் கோலார் உள்ளிட்ட, 10 மாவட்டங்களில், 86 தொகுதிகள், அண்ணாமலை பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டன. இத்தொகுதிகளில் வேட்பாளர் தேர்வு, பிரசார வியூகம் துவங்கி, ஓட்டுப் பதிவு முடியும் வரை, அனைத்திலும் அண்ணாமலையின் பங்களிப்பு இருந்தது. இதில், ஆர்.எஸ்.எஸ்., வலுவாக உள்ள கடலோர மாவட்டங்களில், பெங்களூரு தெற்கு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், அண்ணாமலைக்கு பணிகள் எளிமையாகவே இருந்தன. ஆனாலும், பல தொகுதிகளில் புதுமுகங்கள் நிறுத்தப்பட்டதால், கடைசி நேரத்தில் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பா.ஜ.,வுக்கு செல்வாக்கு குறைவாக உள்ள வடக்கு கர்நாடகா, ஹசன், மாண்டியா போன்ற மாவட்டங்களில், அண்ணாமலை கடும் உழைப்பை கொடுக்க வேண்டியிருந்தது. அண்ணாமலையிடம் ஒப்படைக்கப்பட்ட, 86 தொகுதிகளில் 30ல் வெற்றி,- தோல்வியை தீர்மானிக்கக் கூடியவர்களாக தமிழர்கள் இருந்தனர்.

அப்படிப்பட்ட தொகுதிகளாக தேர்வு செய்து, அவருக்கு வழங்கப்பட்டிருந்தன.தேசிய கட்சிகளில், மற்ற மாநிலங்களில் இருந்து தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படும் தலைவர்கள், தீவிர பிரசாரத்தில் ஈடுபட மாட்டார்கள். தேர்தல் வியூகம் வகுப்பது, வேட்பாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது மட்டுமே, அவர்களது பணியாக இருக்கும். பெரிதும் உதவியதுஆனால், தனக்கு ஒதுக்கப்பட்ட 86 தொகுதிகளிலும், அண்ணாமலை தீவிரமாக பிரசாரம் செய்தார். ஐ.பி.எஸ்., அதிகாரியாக கர்நாடக மக்களிடம், அவர் பிரபலமாகியிருந்தது, அவருக்கு பெரிதும் உதவியது.

தமிழர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில், அண்ணாமலை தமிழில் பேசி பிரசாரம் செய்தது, தமிழர்களை பெரிதும் ஈர்த்தது.அம்மாநிலத்தில், 135 தொகுதிகளில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்ற போதிலும், கடலோரகர்நாடகா, பெங்களூரு மாநகரில் அக்கட்சியால் வெல்ல முடியவில்லை. வாகன பேரணிதமிழர்கள் அதிகம் வசிக்கும் பெங்களூரு காந்தி நகர் தொகுதியில், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், ஆறு முறை தொடர்ந்து வென்றார். ஏழாவது முறை அவரால், 105 ஓட்டுகள் வித்தியாசத்தில் மட்டுமே வெல்ல முடிந்தது.அதுபோல தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஜெயநகர் தொகுதியில், காங்கிரசின் வலுவான வேட்பாளர் சவுமியா ரெட்டி, பா.ஜ.,விடம் 16 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். பெங்களூரு மாநகரில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 16-ல், பா.ஜ., வென்று, காங்கிரசை பின்னுக்கு தள்ளியது. இது, 2018 தேர்தலில் பெற்ற வெற்றியை விட அதிகம். இதற்கு அண்ணாமலையின் பிரசாரமும், பிரதமர் மோடி 26 கி.மீ., நடத்திய வாகன பேரணியும் தான் காரணம் என்கின்றனர்..