கோவையில் கிளினிக்கில் பெண் டாக்டரின் தங்க வளையல்கள் திருட்டு-போலீசில் புகார்..!

கோவை துடியலூர் ஜி.என்.மில் பகுதியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி. பல் டாக்டர். ( வயது 25) இவர் வைசியாள் வீதியில் உள்ள ஒரு கிளினிக்கில் பணியாற்றி வருகிறார். நேற்று இவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க வளையல்களை மேஜை டிராயரில்கழட்டி வைத்துவிட்டு நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதற்காக மற்றொரு அறைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மேஜை டிராயரில் வைத்திருந்த அவரது 2 வளையல்களையும் காணவில்லை. யாரோ 5 நிமிடத்துக்குள் திருடி சென்று விட்டனர். இது குறித்து பெரிய கடை வீதி போலீசில் டாக்டர் பிரியதர்ஷினி புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.