ஆசிரியை வீட்டில் நகை பணம் திருடிய பெண் ஆட்டோ ஓட்டுனர் கைது!!

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பள்ளி ஆசிரியை செந்தாமரை வயது 40. இவர் காமராஜ் நகர் பகுதிக்குச் செல்ல ஒரு தனியார் ஆட்டோவை புக் செய்தார். ஒரு பெண் ஆட்டோ ஓட்டுனர் ஆசிரியை செந்தாமரையே காமராஜர் நகருக்கு அழைத்துச் சென்று என்ன மேடம் ஆட்டோவை நான் வெயிட் செய்ய வேண்டுமா? நான் கிளம்பட்டுமா என செந்தாமரை யி டம் கேட்டுள்ளாள். செந்தாமரை யோ பெண் ஆட்டோ ஓட்டுநரிடம் நீ கிளம்பு. நான் வர லேட் ஆகும் எனக் கூறவே பெண் ஆட்டோ ஓட்டு னரும் ஆட்டோவை எடுத்துக் கொண்டு சர் என்று கிளம்பினாள். ஆட்டோ ஓட்டுநரும் ஆட்டோ எடுத்துக் கொண்டு செந்தாமரை வர லேட் ஆகுமே என முடிவு செய்து ஆசிரியை செந்தாமரையின் வீட்டுக்கு சென்று நுழைவு வாயில அருகே ஜன்னல் ஓரம் இருந்த சாவியை எடுத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3/4 சவரன் தங்க கம்மல் ரொக்க பணம் ரூபாய் 50 ஆயிரத்தை திருடி சென்று உள்ளாள். மாலையில் வீடு திரும்பிய பள்ளி ஆசிரியை செந்தாமரை நகையும் பணம் காணாமல் திடு க்கிட்டு ஆவடி குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் தனியார் ஆட்டோ வை புக் செய்த நிறுவனத்தை போலி சார் தீவிரமாக விசாரணை நடத்தினர். ஆட்டோ நிறுவனத்தினர் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த விவே கானந்தர் தெருவை சேர்ந்த சங்கீதா வயது 27. என்ற ஓட்டுநர் தான் இந்தத் திருட்டு வேலையை செய்தது என பு லன் விசாரணையில் கண்டுபிடித்தனர். அவள் எங்கு இருக்கிறாள் என தேடி கண்டு பிடித்து சங்கீதாவை அதிரடியாக கைது செய்தனர். அவள் கொடுத்த வாக்குமூலத்தில் ஆட்டோ ஓட்டினால் ஜாலியாக உல்லாசமாக இருக்க முடியாது. அதனால்தான் நகையும் பணத்தை கொள்ளை அடித் தேன் என வாக்குமூலம் கூறினாள். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து பெண் ஆட்டோ ஓட்டுனர் சங்கீ தாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். சிறையில் அடைத்தனர்.