கோவை பீளமேடு அருகே உள்ள சேரன் மாநகர், குமரன் நகரை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி தங்கமணி ( வயது 70)அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார் .நேற்று இவரது கடைக்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் சிகரெட்வேண்டும் என்று கேட்டனர்.அந்த மூதாட்டி பின்னால் திரும்பி சிகரெட் எடுக்கும் போது கண் இமைக்கும் நேரத்தில் அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர் .இது குறித்து தங்கமணி பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்துகொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0