இந்தியா முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்த கோரி புதுச்சேரியில் உண்ணாவிரத போராட்டம்

புதுச்சேரி காந்தி மக்கள் இயக்கம் சார்பில் நாடு முழுவதும் மதுவிலக்கு! அதுவே எங்கள் இலக்கு! என்கின்ற கொள்கையோடு பூரண மதுவிலக்கை இந்திய முழுவதும் அமல்படுத்த கோரி ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் அண்ணா சிலை அருகே நடைபெற்றது. போராட்டத்திற்கு காந்தி மக்கள் இயக்கத்தின் நிறுவனர் வேணு ஞானமூர்த்தி தலைமை தாங்கினார். கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கத்தின் நிறுவனர் இரா. இராஜா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். பழங்குடி மக்கள் விடுதலை இயக்கத்தின்  மாநிலத் தலைவர் மா ஏகாம்பரம் நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை செய்திருந்தார்.
காந்தியவாதி கருப்பையாகாந்தி, ஆசிரியர் தினகரன், பெண்ணுரிமை போராளி தெய்வானை, சமூக சேவகி அறம் நிஷா, உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தோழர்கள், தமிழ் அறிஞர்கள், பேராசிரியர் பெருமக்கள், வழக்கறிஞர்கள், காந்தியவாதிகள், இயக்கத் தலைவர்கள், அன்னைமார்கள், சகோதரிகள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் சுழற்சி முறையில் கலந்து கொண்டனர். நாட்டுப்பற்றுடன் பொறுப்புணர்ச்சியோடு கலந்து கொண்ட அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் நன்றி கூறினார்.