திருச்சியிலிருந்து அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டெல்லி பயணம்.

விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபகரமான விலை தருவதாக கூறிவிட்டு தராமல் ஏமாற்றியதை நிறைவேற்ற கோரியும் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரியும், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரியும், விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5000/- வழங்க கோரியும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடக அரசு மாதாமாதம் தண்ணீர் திறக்க உடனடியாக மத்திய அரசு உத்தரவிட கோரியும், மேகத்தாதுவில் அணை கட்ட கூடாது என்பதற்காகவும் போன்ற விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் P. அய்யாக்கண்ணு BABL அவர்களின் தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தலைநகர் டெல்லியில் சென்று போராட்டம் நடத்துவதற்காக திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் இருந்து 27.07.2024ந் தேதி சனிக்கிழமை இன்று காலை 8.50am மணியளவில் வைகை எக்ஸ்பிரேஸ் மூலமாக சென்னை சென்று, மாலை 6.40pm மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து GT எஸ்க்பிரேஸ் மூலமாக டெல்லி செல்கின்றனர்.