திருச்சி முக்கொம்பு மேலணை காவிரி ஆற்றுக்குள் இறங்கி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. விவசாய விளை பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபகரமான விலை தருவதாக கூறிவிட்டு தராமல் ஏமாற்றியதை நிறைவேற்ற கோரியும் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரியும் கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரியும் விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் வழங்க கோரியும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடக அரசு மாதாமாதம் தண்ணீர் திறக்க உடனடியாக மத்திய அரசு உத்தரவிட கோரியும் மேகத்தாதுவில் அணை கட்டக் கூடாது என்பதற்காகவும் போன்ற விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் டெல்லி சென்று போராட்ட நடத்த விடாமலும் உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட கூடாது என்று ரயில் பயணம் செய்ய கூடாது. என்பதற்காக உறுதியான ரயில்வே பயணசீட்டை ரத்து செய்வது, செல்ல விடாமல் காவல்துறையை வைத்து கைது செய்வதும், 2000 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பிரதமர் மோடி வாரணாசி வந்து போட்டியிடலாம். 2000 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து ராகுல்காந்தி கேரளாவில் வந்து போட்டியிடலாம் ஆனால் தமிழக விவசாயிகள் வாரணாசி சென்று போட்டியிட்டால் விளம்பரத்திற்காக என்று உச்ச நீதிமன்றம் கூறுவது எந்த வகையில் நியாயம். இது ஜனநாயக நாட்டில் சர்வாதிகார ஆட்சியா விவசாயிகளுக்கு நியாயம் வேண்டும் என்று வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தற்போது திருச்சி முக்கொம்பு மேலணை காவிரி ஆற்றுக்குள் இறங்கி கோஷங்கள் முழங்க போராட்டம் நடத்தி வருகின்றனர் இதை அறிந்த ஜீயபுரம் போலீசார் அவர்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி ஆற்றுக்குள் சென்ற விவசாயிகளை வெளியில் கொண்டு வந்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0