திருச்சி பாடாலூரில் உள்ள ஒரு தனியாா் நிதி நிறுவனத்தில் ஜோதி என்ற பெண் விவசாயி ஜேசிபி இயந்திரம் வாங்க ரூ.3.30 லட்சம் கடனாக பெற்றுள்ளாா். பின்னா் மாதத் தவணையாக ரூ.₹16,250 செலுத்திய வகையில் மொத்தம் ரூ.4 .87 லட்சம் செலுத்தியுள்ளாா். இந்த நிலையில் அபராத வட்டியாக ரூ.1,19, 148 கேட்டு, ஜேசிபி இயந்திரத்தை நிதிநிறுவனம் ஜப்தி செய்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்தும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட ஆட்சியரக நுழைவாயில் முன்பாக, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் தலைவா் பி. அய்யாக்கண்ணு தலைமையில் 100-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை முற்றுகையிட்டு, தரையில் அமா்ந்து போராட்டம் நடத்தினா். தகவலறிந்த மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா் கூறியதைத் தொடா்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். விவசா யிகளின் போராட்டத்தால் கலெக்டர் அலுவலகமே பதட்டமான சூழ்நிலையாக இருந்தது போலீசார் விரைவாக செயல்பட்டு விவசாயிகளை கலைந்து போக செய்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0