கோவை: நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள் நேற்று வடசித்தூர் ரோட்டில் வாகன சோதனை நடத்தினார். அப்போது பைக்கில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அவரிடம் 140 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணயில் அவர் பனப்பட்டியைச் சேர்ந்த விவசாயி மணியன் ( வயது 53) என்பது தெரியவந்தது.இவரிடமிருந்து 140 கிராம் கஞ்சா, பைக், பணம் ரூ 5500 பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசார் அங்குள்ள பெரிய கவுண்டனூர் ரோட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள் .அப்போது அங்கு கஞ்சா விற்றதாக பொள்ளாச்சி சந்திராபுரம் புது காலனியை சேர்ந்த டிரைவர்கள் கிஷோர் (வயது 20) குமாரசாமி லேஅவுட் சபரி விக்னேஷ் ( வயது 23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.