ரயிலில் மூத்த குடிமக்களுக்கு பயணக் கட்டண சலுகை – நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை..!

ரோனா தொற்றுக்கு முன்பாக ரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரும்படி நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. கரோனா தொற்றுக்கு முன்பாக ரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரும்படி நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
ரயில் பயணத்தின் அனைத்து வகுப்புகளிலும், 60 வயதைக் கடந்த ஆண்களுக்கு 40 சதவீதம், 58 வயதை எட்டிய பெண்களுக்கு 50 சதவீதம் என பயணக் கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வந்தது. கரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு, புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலம் திரும்புவதற்காக சிறப்பு ரயில்கள் இயக்குதல் போன்ற நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், கடந்த 2020 மாா்ச் 20-ஆம் தேதி இந்தக் கட்டணச் சலுகை திரும்பப் பெறப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட்டின் 2-ஆவது கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது.

அப்போது, பாஜக எம்.பி. ராதா மோகன் சிங் தலைமையிலான ரயில்வே துறைக்கான நிலைக்குழு சாா்பில் அத்துறைக்கான மானியக் கோரிக்கைகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டன. அதில் மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணக் கட்டணச் சலுகை குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. நாடாளுமன்ற நிலைக்குழு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ரயில்வே துறை அளித்த தகவல்களின்படி, கரோனா நோய் பாதிப்பு குறைந்து, நாடு இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ளது.

ரயில்வே துறையும் குறிப்பிட்ட வளா்ச்சியைக் கண்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய காலங்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரயில் பயணக் கட்டணச் சலுகையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவது குறித்து ரயில்வே துறை மறுபரீசிலனை செய்ய வேண்டும். தேவைப்படும் மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில், குறைந்தபட்சம் 3ஏ வகுப்பு, படுக்கை வசதி கொண்ட வகுப்பு ஆகியவற்றில் இந்த நடைமுறையைக் கொண்டு வரலாம் எனக் கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழு தனது முந்தைய மானியக் கோரிக்கையிலும் இதே பரிந்துரையை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ரயில் பயணக் கட்டணச் சலுகை நடைமுறையைக் கொண்டு வருவது குறித்து எவ்வித உடனடி திட்டம் இல்லை. ஏற்கெனவே அனைத்து ரயில் பயணிகளுக்கும் 50-55 சதவீத பயணக் கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.