பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் மீதுகுண்டர் சட்டம் பாய்ந்தது.உத்தரவு அறிக்கை கோவை சிறையில் இன்று நேரில் வழங்கப்பட்டது.

கோவை: பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் கடந்த சில நாட்களுக்கு முன் இவர் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் போலீஸ் அதிகாரிகள் குறித்தும், பெண் போலீசார் குறித்தும் அவதூறாக கருத்துக்கள் கூறியிருந்ததாக தெரிகிறது. இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுகன்யா அளித்த புகாரின்பேரில் மாநகரசைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து தேனி அருகே பழனி செட்டிபதியில் இருந்த அவரை கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த 4-ந் தேதி கைது செய்து கோவை அழைத்து வந்து மத்தியசிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தேனியில் கஞ்சா வழக்கு தொடர்பாகவும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தேனி போலீசார் சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையில் வைத்து கைது செய்து மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விட்டு மீண்டும் கோவை சிறைக்கு கொண்டு வந்து அடைத்தனர். மேலும் சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் குறித்தும் அவதூராக கருத்து வெளியிட்டதாக அந்த பெண் சென்னை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதே போன்று பெண் போலீசார் குறித்து கருத்து தெரிவித்த சவுக்கு சங்கர் மீதுசென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர்,தமிழர் முன்னேற்ற படையை சேர்ந்த வீரலட்சுமி ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். எனவே 2புகார்களின் பேரில் சவுக்கு சங்கர் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்து கோவை சிறையில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பலத்த பாதுகாப்புடன் வேனில் சென்னைக்குஅழைத்து சென்றனர்.அங்குள்ள தலைமை மெட்ரோ பலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சவுக்கு சங்கர் ஆஜர் படுத்தப்பட்டார். இதை தொடந்து மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்..சவுக்கு சங்கர் மீது தரமணி பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வனிதா கொடுத்த புகாரின் பேரிலும் ,கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் குறித்தும் தவறான தகவல்களை வெளியிட்டதாக சி. எம். டி. ஏ .சார்பில் கொடுக்கப்பட்ட புகாரை ஒட்டியும் மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் கஞ்சா வழக்கு தொடர்பாக தேனி போலீசார் சென்னை மதுரை வாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டின் பூட்டை உடைத்து கடந்த 9 – ந் தேதி சோதனை நடத்தினார்கள் சென்னை பாண்டி பஜாரில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தி சீல் வைக்கப்பட்டது இந்த நிலையில் சவுக்கு சங்கர் மீதுகுண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவைசென்னை போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர் நேற்று பிறப்பித்துள்ளார் இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- சி.எம்.டி.ஏ. அதிகாரியின் புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கைது செய்து கீழ் சிறையில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு அறிக்கை கோவை சிறையில் உள்ள சவுக்கு சங்கரிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மூலம் இன்றுவழங்கப்பட்டது. சவுக்கு சங்கர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் உட்பட 7 வழக்குகளில் 3 வழக்குகள் விசாரணையில உள்ளது. 2வழக்குகளில் குற்ற பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. மீதமுள்ள 2 வழக்குகள் நீதிமன்றவிசாரணையில் உள்ளது. இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது..