லண்டன்: 2023ம் ஆண்டு தொடர்பாக 16ம் நூற்றாண்டின் பிரபல ஜோதிடர் நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ள கணிப்புகள் பற்றிய விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி அடுத்த ஆண்டு 3ம் உலகப்போர் வெடிக்கும் என அவர் கணித்துள்ளார்.
1503ம் ஆண்டு டிசம்பரில் பிறந்த இவர் தெற்கு பிரான்சில் பிறந்தார். அதன்பிறகு 1566 ஜூலை 2ம் தேதி இறந்தார். இவர் இவர் எதிர்கால உலகம் இப்படித்தான் இருக்கும் என மொத்தம் 6,338 கணிப்புகள் செய்து எழுதியுள்ளார்.
இதில் உலகம் முழுவதும் நடக்கும் பல்வேறு சம்பவங்கள் கணிப்புகளாக இடம்பெற்றுள்ளன. இவரது கணிப்புகள் என்பது காலத்துக்கு ஏற்ப ஒவ்வொரு கணிப்புகள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லரின் எழுச்சி இரண்டாம் உலகப்போர், செப்டம்பர் 11 தீவிரவாத தாக்குதல், பிரெஞ்ச் புரட்சி உள்பட முக்கிய நிகழ்வுகளை நோஸ்ட்ராடாமஸ் துல்லியமாக கணித்துள்ளார். மேலும் அவரது கணிப்பின்படியே பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத் மறைந்துள்ளார். அந்த வகையில் தற்போது 2023ம் ஆண்டு தொடர்பாக அவர் கணித்துள்ள கணிப்புகள் பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளன.
உலகில் மூன்றாம் உலகப்போர் 2023ல் நடக்கும் என கூறியுள்ளார். இது தற்போது உறுதியாகும் வகையில் உள்ளது. அதாவது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. கடந்த பிப்ரவரியில் துவங்கிய இந்த போர் நடவடிக்கை இன்னும் முடிவுக்கு வரவில்லை. மேலும் சீனா-தைவான் இடையேயும் பதற்றமான சூழல் உள்ளது. இந்த விஷயங்களில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளது. இதனால் இத்தகைய சம்பவங்கள் என்பது பதற்றமான சூழலை தான் தருகிறது. இதனால் தான் அவரது கணிப்புபடி இந்த நிலவரங்கள் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும் செவ்வாய் கிரகம் பற்றியும் அவர் தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டில் மனிதர்கள் சிவப்பு கிரமான செவ்வாய்க்கு செல்ல வாய்ப்பு ஏற்படும் என அவர் கணித்துள்ளார். விண்வெளி துறையில் சாதனை படைத்துவரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் தலைவரும் உலகின் முதல் பணக்காரருமான எலான்மஸ்க், 2029ம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை செல்வார்கள் அனுப்பப்படுவார்கள் என கூறிய நிலையில் அவர் 2023ல் நிகழும் என கூறியுள்ளார்.
நோஸ்ட்ராடாமஸின் 3வது கணிப்பு என்பது 2023ம் ஆண்டில் புதிய போப் பதவிக்கு வருவார். போப் பிரான்சிஸ் தான் கடைசி உண்மையான போப் ஆவார். இனி வரும் நபர் ஊழலை உருவாக்குவார் எனவும் கணித்துள்ளார். முன்னதாக பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத் மறைவால் பிரிட்டன் மன்னராக 3ம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் சிறிது காலம் மட்டுமே இருப்பார் எனவும், விரைவில் அவர் தனது பதவியில் இருந்து விலகுவார் எனவும் அவரது இளைய மகன் ஹாரி புதிய மன்னராக பொறுப்பேற்பார் என நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளதாக பிரபல எழுத்தாளர் மரியோ ரீடிங் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.