சென்னையில் இப்போதெல்லாம் நீங்க எதுக்கு கஷ்டப்பட்டு சம்பாதிக்கணும் ஊரை ஏமாற்றி சம்பாதித்தால் போதும் இப்படி ஒரு கும்பல் அலையோ அலை என்று அலைகிறது பொதுமக்களே உஷார் உஷார் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத் மைக்கேல் வயது 27. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரம்பூரில் தங்கி உணவகத்தில் வேலை செய்து வந்தார் அப்போது வியாசர்பாடி ரேணுகாம்பாள் கோவில் தெருவை சேர்ந்த விஜயகுமாருடன் வயது 30 டிப் டாப் ஆசாமி பழக்கம் ஏற்பட்டது அப்போது விஜயகுமார் ரயில்வே போர்டு சேர்மனும் தெரியும் ரயில்வே மந்திரியும் தெரியும் நீ எதுக்கு வினோத் மைக்கேல் ஹோட்டலில் கஷ்டப்படணும் நான் உனக்கு ஏசியில் உட்கார்ந்து ஜாலியாக சம்பாதிக்கலாம் எனக்கு புருடா விட்டுள்ளான் அந்த அப்பாவியும் புருடா ஆசாமி என தெரியாமல் வினோத் மைக்கேல் நான் என்ன செய்யட்டும் என கேட்க விஜயகுமார் நீ ஒரு 15 லட்ச ரூபாய் ரெடி பண்ணி கொடு உயர் அதிகாரிகளுக்கு மாமூல் கொடுக்க வேண்டும் என நாக்கில் தேன் தடவி பேசினான் வினோத் மைக்கேல் சிறிது சிறிதாக ரூபாய் 15 லட்சத்தை விஜயகுமாரிடம் கொடுத்துள்ளான் விஜயகுமாரும் வினோத் மைக்கேலுக்கு ரயில்வே துறையில் வேலை கிடைத்தது போல் போலி பணி நியமன ஆணையை கொடுத்துள்ளான் அவனும் ஆசை ஆசையாக மும்பையில் உள்ள ரயில்வே அலுவலகத்துக்கு சென்று அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை கொடுத்துள்ளான் அதைப் பார்த்த உயர் அதிகாரிகள் வினோத் மைக்கேலை மேலும் கீழுமாக பார்த்து அட பைத்தியக்கார மனுஷா எவனோ ஒருத்தன் உன்னை நல்லா ஏமாற்றிவிட்டான் என சொல்லி அனுப்பி விட்டனர் வினோத் மைக்கேல் அதிரத்துடன் சென்னைக்கு திரும்பியதும் சர்ச்சில் பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவே இயேசு நாதரே விஜயகுமாருக்கு சரியான தண்டனை கொடு என்ன கண்ணீர் மல்க வேண்டினார் இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் புகார் செய்தார் சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் அஸ்ரா கர்க் உத்தரவின் பேரில் செம்பியம் சக காவல்துறை உதவி ஆணையர் செம்பேடு பாபு ஆலோசனையின் பேரில் கேடி விஜயகுமாரை தேடினர் அவனும் போலீஸ் தேடுவதை அறிந்து தலை மறைவாகி விட்டான் அப்பாவி இளைஞர்களும் பொதுமக்களும் எவ்வளவுதான் விழிப்புணர்வு இருந்தாலும் வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் பணத்தைக் கொடுத்து ஏமாறுபவர்கள் ஏராளம் ஏராளம். இதற்கு முடிவு காலம் எப்போது தான்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0