3 பாடங்களில் தோல்வி .பிளஸ் – 1 மாணவன் தூக்கு போட்டு தற்கொலை .

கோவை பீளமேடு அருகில் உள்ள சின்னியம்பாளையம், ஆர்.ஜி. புதூர்,வ .உ. சி வீதியைச் சேர்ந்தவர் சிவராஜ் எலக்ட்ரீசியன் .இவரது மகன் ஜோதிஷ் ( வயது 16) அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வந்தார் .கடந்த 14ஆம் தேதி பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் இவர் 3 பாடங்களில் தோல்வி அடைந்திருந்தார். இதனால் மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரம் ஜோதிஷ் மின்விசிறியில் சால்வையைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது தந்தை சிவராஜ் பீளமேடு போலீசில் புகார் செய்தார்.போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டுபிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.