போலி ஆவணம் மூலம் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள வீட்டு மனை அபகரிப்பு – இருவர் கைது..

ஆவடி காவல் ஆணையரகத்தில் மத்திய குற்ற பிரிவில் சிவப்பிரகாசம் வயது 58. தகப்ப னார் பெயர் சுப்பு ரெட்டி. மருதம் அபார்ட்மெண்ட். திருவள்ளுவர் நகர். திருவான்மியூர் சென்னை.என்பவர் கொடுத்த புகார் மனு சம்பந்தமாக நில பிரச்சனை தீர்வு பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது. அதன் விவரம் வருமாறு. விழுப்புரத்தைச் சேர்ந்த வாசுகி என்பவர் அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார். வாசுகி போரூர் பகுதியில் கொளப்பாக்கத்தில் மேக்ஸ் ஒர்த்நகர் பேஸ் 3 ல் 6003 சதுர அடி நிலத்தை பாபு என்பவரிடமிருந்து பம்மல் சார் பதிவாளர் அலுவலகத்தில் 1997 ஆம் ஆண்டு கிரயம் பெற்று அனுபவத்தில் இருந்து வந்தது. சென்னை அண்ணா நகரை சேர்ந்த செந்தாமரை என்பவரும் அமெரிக்காவில் தொழில்நுட்பத் துறையில் பணி புரிந்து வருகிறார்.செந்தாமரை என்பவர் போரூர் பகுதியில் உள்ள கொளப்பாக்கத்தில் மேக்ஸ் ஒர்த் நகர் பேஸ் 3ல் 2277 சதுர அடி மனையை பாபு என்பவரிடமிருந்து பம்மல் சார் பதிவாளர் அலுவலகத்தில் 1997ம் ஆண்டு கிரயம் பெற்று அனுபவத்தில் வைத்து ள்ளார். மேலே குறிப்பிட்ட இரண்டு சொத்துக்களையும் சிவப்பிரகாசம் என்பவருக்கு வாசுகி மற்றும் செந்தாமரை பொது அதிகாரம் கொடுத்துள்ளனர்.மேற்படி சொத்தை பராமரித்து வந்த சிவப்பிரகாசம் என்பவர் வில்லங்கச் சான்று போட்டு பார்த்தபோது வாசியை போன்று ஆள் மாறா ட்டம் செய்து போலியான அடையாள அட்டை மற்றும் போலியான மூல பத்திரங் களை தயார் செய்து வாசுகி என்பவருக்கு நிர்மலா தேவி என்ற மகள் இருப்பது போன்று போலியான செட்டில்மெண்ட் பத்திரம் பதிவு செய்தும் நிர்மலா தேவி வேறு நபர்களுக்கு பம்மல் சார் பதிவாளர் அலுவலகத்தில் 2023 ஆம் ஆண்டு கிரயம் செய்து மோசடி செய்துள்ளார். மேலே குறிப்பிட்ட போலியான ஆவணங் களில் நந்தகுமார் என்பவர் சாட்சி கையெழுத்து போட்டு உள்ளார்.இதன் மதிப்பு ரூ 1 கோடியே 20 லட்சமாகும். செந்தாமரை என்பவருக்கு சொந்தமான சொத்தை பரா மரித்து வந்த சிவப்பிரகாசம் என்பவர் வில்லங்க சான்று போட்டு பார்த்த போது செந்தாமரை போன்று ஆள் மாறாட்டம் செய்து போலியான அடையாள அட்டை மற்றும் போலியான மூல பத்திரங்கள் தயார் செய்து செந்தாமரை என்பவருக்கு மகன் இருப்பது போன்று போலியான செட்டில்மெண்ட் பத்திரம் பதிவு செய்தும் போலியான மகன் மூலம் வேறு நபர்களுக்கு பம்மல் சார் பதிவாளர் அலுவலகத்தில் 2024 ஆம் ஆண்டு கிரயம் செய்து கொடுத்து ளார். இதன் மதிப்பு ரூபாய் 60 லட்சமாகும். இது சம்பந்தமான புகாரின் மீது நிலப்பிரச்சனை தீர்வு பிரிவு ஆய்வாளர் ஜெய்சங்கர் அவர்கள் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தார். ஆவடி காவல் ஆணையாளர் கே.சங்கர் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் உத்தர வின் பேரில் குற்றவாளிகள்நந்தகுமார் வயது 49. தகப்பனார் பெயர் மூர்த்தி. பொன்னி யம்மன் கோயில் தெரு.பொன்னி நகர் காரம்பாக்கம். சென்னை.2. நிர்மலா தேவி வயது 38.கணவர் பெயர்கண்ணன். ஆதம் தெரு மண்ணடிதுறைமுகம்.சென்னை. ஆகிய இரண்டு கேடிகளையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். புழல் மத்திய சிறையில் பலத்த பாதுகாப்புடன் அடைக்கப்பட்டனர்.