ஆவடி. சமீப காலமாக ஆவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீட்டு மனைகள் நிலங்கள் அபகரிப்பது அரசு வேலை வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்வது கோடி கணக்கில் முதலீடு செய்தால் வட்டித் தொகையை மாதா மாதம் தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரங்களை போட்டு ஏமாற்றுவது திருமணத்திற்கு மணமகன் தேவை என பலரை திருமணம் செய்த அழகு ராணிகள் ஏமாற்றுவது என ஏமாற்றும் ஒரு பிராடு கும்பல் அலையோ அலையென அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மத்திய மாநில அரசுகளை கவர்னர்கள் துணை ஜனாதிபதிகள் ஐஏஎஸ் ஐபிஎஸ் நம்ம ஆள் தான் உயர்ந்த பொறுப்பில் உள்ளார் என ஏமாற்றும் ஒரு பிராடு கும்பல்அலைந்து திரிகிறது. இதை அடியோடு ஒழி த்து சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்திட போலீஸ் கமிஷனர் சங்கர் பாடுபட்டு வருகிறார். இந்நிலையில்சென்னை அம்பத்தூர் மௌனசாமி மடம் ரோடு குறுக்குத் தெருவில் வசிக்கும் கே. எம். ராஜுவின் மகன் சேரன் வயது 57. ஆவடி காவல் ஆணையரகத்தில் மத்திய குற்ற பிரிவில் நில பிரச்சனை தீர்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி யிடம் கொடுத்த புகார் மனு சேரன் ஆகிய நான் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் லே-அவுட் தொழில் செய்து வருகிறேன். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா அலமாதி பகுதியில் 1 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை 12.9.2003 ஆம் ஆண்டு முனியாண்டி என்பவரிடமிருந்து பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் கிரையம் பெற்று என்னுடைய அனுபவத்தில் இருந்து வருகிறது. மேற்குறிப்பிட்ட நிலத்தில் 1986 ஆம் ஆண்டு வினய் குமார் என்கிற வினோத்குமார் கிரையம் பெற்றதாக பொன்னேரி உரிமையியல் நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடர்ந்தேன். அந்த தீர்ப்பு எனக்கு சாதகமாக வந்தது. அதை எதிர்த்து மேல் முறையீடு செய்ததில் அதிலும் எனக்கு சாதகமான தீர்ப்பு வந்தது.11.5.2023 ஆம் ஆண்டு மேலே குறிப்பிட்ட நிலத்தில் புதர்களை மீறி அத்துமீறி அகற்றிக் கொண்டிருந்தனர்.அதை அறிந்து நான் வில்லங்க சான்று போட்டு பார்த்த போது என். ஆர். வசந்தி கணவர் பெயர் நாகராஜன் கோபால் ரெட்டி நகர் என்பவன் எனக்கு சொந்தமான நிலத்தை கடந்த 4.5.2023ல் நான் என். ஆர். வசந்திக்கு செட்டில்மெண்ட் செய்ததாக ஒரு போலி ஆவணம் தயார் செய்து அதைக் கொண்டு என். ஆர். வசந்திஅதே தேதியில் வியாசர்பாடி காந்திநகர் 2 வது தெருவில் வசித்து வரும் சி. கோபால் தகப்பனார் பெயர் செல்லையா என்பவர்களுக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளார். அதற்கு சாட்சிகளாக ரூபன் மற்றும் பால்துரை ஆகியோர் கையெழுத்து போட்டுள்ளனர். சுரேந்திரன் வயது 51 தகப்பனார் பெயர் பக்தவாச்சலாபுரம்.13 வது தெரு. எஸ் ஆர் பி காலனி ஜவகர் நகர் கொளத்தூர் சென்னை.என்பவர் சந்திரன் என்பவர் போல் ஆள் மாறாட்டம் செய்து என். ஆர். வசந்தி சந்திரனின் சகோதரி என்று அவருக்கு செட்டில்மெண்ட் செய்து கொடுத்துள்ளான்.எனவே எனக்கு சொந்தமான நிலத்தை போலியான ஆவணங்களை உருவாக்கி என்னுடைய நிலத்தை அபகரித்த கேடிகள் மீது எடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க மனு கொடுத்துள்ளார். நிலத்தின் மதிப்பு ஒரு கோடியே 25 லட்சமாகும். இது குறித்து நில பிரச்சனை தீர்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வ ள்ளி கமிஷனர் ஷங்கரின் கடுமையான உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் நேரடி மேற்பார்வையில் வழக்கு பதிந்து மறைவாக இருந்த என். ஆர். வசந்தி வயது 58. கணவர் பெயர் நாகராஜ் லிங்கேசன் தெரு கிருஷ்ணமூர்த்தி நகர் கொடுங்கையூர் சென்னை.2. சுரேந்திரன் வயது 51. தகப்பனார் பெயர் பக்தவாச்சலம் 13 வது தெரு எஸ் ஆர் பி காலனி ஜவஹர் நகர் கொளத்தூர் சென்னை என்ற இரு கேடிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்காக புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0