தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை தேசிய பசுமை படை இணைந்து நடத்தி இயற்கையின் பாதுகாப்பு முக்கியத்துவம் குறித்த கண்காட்சிகள்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மத்திய சுற்றுச்சூழல் துறை வனம் மற்றும் காலநிலை மாற்றம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை காலநிலை மாற்றம் தேசிய பசுமைப்படை நிகழ்வாக மஞ்சூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நீலகிரி உயிர்ச்சூழல் காப்பகம் குறித்த விளக்கக் கண்காட்சி மற்றும் மாணவ மாணவிகளுக்கு இயற்கை குறித்த உடனடி பேச்சு போட்டி நடத்தப்பட்டது, அரசு மாணவர்கள் மேல்நிலைப்பள்ளி பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் இந்நிகழ்வில் திரளாக கலந்து கொண்டனர், முன்னதாக அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீனிவாசன் கண்காட்சியினை தொடக்கி வைத்தார், தலைமை ஆசிரியர் பாபி வரவேற்று பேசுகையில் தேசிய பசுமை படை பள்ளி மாணவர்களிடம் இயற்கை பாதுகாப்பிற்கான செயல்பாடுகளை வாழ்வில் எடுத்துச் செல்வதற்கான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களை இயற்கை முக்கியத்துவத்தை அதனை பாதுகாக்கும் நடவடிக்கை குறித்தும் கற்பித்து வருவது சிறப்பான செயல்பாடாக உள்ளது என்றார். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் உயிர்சூழல் காப்பகம் ஆபத்தின் விளிம்பில் உள்ளது தாவரங்கள், விலங்கினங்கள், வாழ்க்கைச் சூழல் என்றும் இல்லாத நிலையில் கால நிலை மாற்றம் பணிகள் நகரமயமாக்குதல் போன்ற பல காரணிகள் இயற்கை சூழலை பாதுகாப்பதில் மிகப்பெரிய அச்சுறுத்தல் நிலவி வருகிறது. மாணவர்கள் எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் இயற்கையின் பாதுகாப்பு செயல்பாடுகளுக்கு வாழ்க்கையில் எடுத்துச் செல்ல உதவும் என குறிப்பிட்டார். தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் சிவ தாஸ் மாணவர்களுக்கு நீலகிரி உயிர்ச்சூழல் காப்பகத்தில் அழிந்து வரும் தாவர இனங்கள், விலங்கினங்கள், பழங்குடியின மக்கள் இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கை முறை, நீலகிரியில் காணப்படும் புனித காடுகள், மூலிகை தாவரங்கள் ,பறவைகள், காடுகள் வளம் அதன் தன்மை குறித்து விளக்கம் அளித்தார். நீலகிரி மாவட்டத்தின் இயற்கைக்கு மிகப்பெரிய பாதிப்பை தரும் பிளாஸ்டிக் பயன்பாடுகளை மக்கள் குறைத்து அவற்றை சரியான முறையில் மறுசுழற்சிக்கு எடுதுச்செல்வது குறித்து எடுத்துரைக்கப்பட்டது .பசுமைப்படை பொறுப்பாசிரியர் ஜெயஸ்ரீ மற்றும் ஓவிய ஆசிரியர் சகாய தாஸ் பேச்சுப் போட்டியில் நடுவராக செயல்பட்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினார் .சிறப்பாகஇயற்கை பணிகளை செயல்படுத்தும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை தேசிய பசுமை படை செய்திருந்தது, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேசிய பசுமை படை ஒருங்கிணைப் பாளர் சிவதாஸ் அவர்கள் நன்றி கூறி விழா நிறைவு பெற்றது,.