பன்னாட்டு ரோட்டரி அமைப்பு சமூக சேவையை நோக்கமாக கொண்டு இந்தியாவில் பெரிய பங்களிப்பாக செயல்பட்டு வருகிறது. இதனை பெருமை சேர்க்கும் வகையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்த Excel குழும நிறுவனங்களின் தலைவர் முருகானந்தம் (MMM) 2025-2027 இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குனராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் LEAD 2025-ரோட்டரி இந்தியா தலைமைத்துவ மாநாடு வருகிற 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ம் தொடங்கி 24 ம் தேதி வரை சென்னை வர்த்தக மையத்தில் நடக்கும் விழாவிற்கு கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆகியோரை நேரில் சந்தித்து ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குனர் முருகானந்தம் அழைப்பு விடுத்துள்ளார். RILC என்பது இந்தியா முழுவதும் உள்ள RTNS, வணிக நிறுவனங் கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் RTNS ஆகியோரை ஒன்றி ணைக்கும் முதல் வகையான நிகழ்ச்சியாகும்.மேலும் துணை முதல்வர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சரும் தமிழகத்தில் கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்கு ஆதரவாக ரோட்டரி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட கொள்கையளவில் ஒப்புக் கொண்டுள்ளனர் என்று கூறினார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0